உயிரிழந்த விவசாயியின் தலையில் உலோகத்துண்டு; போலீஸ் பயன்படுத்தியதா?... விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்
உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்

விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்கின் தலையில் உலோகத் துண்டுகள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் 'டெல்லி சலோ' என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தின. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இதனையடுத்து டெல்லியை நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீஸார் சரமாரியாக கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதையும் மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகளை போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பல்வேறு வகையான தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினர். இந்த நடவடிக்கையின் போது போலீஸார் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர். இதனால் ஏராளமான விவசாயிகள் காயம் அடைந்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில் போலீஸாரின் தாக்குதலில் இளம் விவசாயியான  21 வயதுடைய சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தின. அதைத்தொடர்ந்து, அவர் இறந்து 9 தினங்களுக்குப் பிறகு நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் சுப்கரன் சிங்கின் பிரேத பரிசோதனையில், அவர் தலைக்குள் உலோகத்திலான துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயப் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை மட்டுமே போலீஸார் பயன்படுத்திய நிலையில், சுப்கரனின் உடலுக்குள் உலோகத் துண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சுப்கரன் சிங்கின் மரணத்தில் விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரப்பர் குண்டுகளைத்தவிர உலோகக் குண்டுகளையும் போலீஸார் பயன்படுத்தினார்களா? என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. அந்த உலோக துகள்கள் போலீஸார் பயன்படுத்தியதா அல்லது தனிநபர் யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

நள்ளிரவில் மோடி வீட்டில் நடந்த கூட்டம்... 550 வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனை!

டாக்காவில் நள்ளிரவில் நடந்த கோரம்... அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ: 43 பேர் உடல் கருகி பலி!

ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in