வணிக நிறுவனங்களில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் கட்டாயம்... தமிழக அரசு திடீர் உத்தரவு!

முதலுதவி பொருட்கள்
முதலுதவி பொருட்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் முதலுதவி பெட்டி இருப்பது அவசியம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் நன்மைக்காகவே பல்வேறு அதிரடிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்கும்  பயன்தரத்தக்க நிறைய அறிவிப்புகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களில் கட்டாயமாக முதலுதவி பெட்டியை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு வணிக நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்தால் கட்டாயமாக முதலுதவி பெட்டியை அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

முதலுதவி பெட்டி
முதலுதவி பெட்டி

இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  "150 பேர் வரையிலான எண்ணிக்கையில் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் பணியாளர்கள் பணிபுரிந்தால், அந்த இடங்களில் ஒரு முதலுதவி பெட்டியை வைக்க வேண்டும். இந்த பெட்டியை உரிய முறையில் பராமரிப்பதுடன், முறையாக கையாள வேண்டும். தனித்து தெரியும் வகையில் மாட்டியிருக்க வேண்டும்.

சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில், அனைத்து மருந்துகளும், மருத்துவ கருவிகளும், முதலுதவி பெட்டியில் இடம் பெற்றிருக்க வேண்டும். அந்த முதலுதவி பெட்டியில் சாதாரண காய்ச்சல், சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் படியான அனைத்து மருந்துகளும் இருக்க வேண்டும். பொதுவான அனைத்து மருந்து மாத்திரைகளை எப்போதும் இருப்பில் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in