அடியெடுத்து வைக்கவே தடுமாற்றம்... 100 மாணவிகள் மர்ம நோயால் பாதிப்பு... பள்ளியை இழுத்து மூடியது அரசு!

கால்கள் பாதிக்கப்பட்டதில் சக்கர நாற்காலிகளை நாடும் மாணவிகள்
கால்கள் பாதிக்கப்பட்டதில் சக்கர நாற்காலிகளை நாடும் மாணவிகள்

கென்யாவின் எரேகியில் செயல்படும் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடுவிழா கண்டுள்ளது.

கால்களில் செயலிழப்பை ஏற்படுத்தும் மர்ம நோய் பரவல் காரணமாக அப்பகுதியில் பீதி நிலவி வருகிறது. இந்த நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், இவை தொடர்பான மருத்துவ ஆய்வில் கென்யா தடுமாறி வருவதாகவும் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எரேகி பள்ளி மாணவிகள்
எரேகி பள்ளி மாணவிகள்

பாதிக்கப்பட்ட மாணவிகளின் இரத்த மாதிரிகள் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, நோயின் தன்மை மற்றும் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உடலில் நீரிழிப்பு ஏற்பட்டிருப்பது மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆகியவை மருத்துவர்கள் மற்றும் பெற்றோரை தடுமாறச் செய்து வருகின்றன.

சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. எனினும் படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அப்பகுதியில் சுகாதார அவசர நிலையை கோருகிறது. மர்ம நோய் பாதிப்பு கண்ட மாணவிகள் அடுத்த அடி எடுத்து வைக்கவே தடுமாறுகிறார்கள். அது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் காலத்துக்குப் பின்னர் உலகின் எந்த மூலையில் மர்ம நோய் தலையெடுத்தாலும், அவற்றின் பின்னணி, வீரியம், பரவல், உயிரிழப்புக்கான ஆபத்து உள்ளிட்டவை தொடர்பான அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உடல்நல பாதிப்புகள் மருத்துவ சவாலை அதிகரிக்கும்போது இந்த அச்சம் மேலும் உயர்வதற்கு காரணமாகிறது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in