எச்சரிக்கை... தமிழ்நாட்டில் 60 வகை வைரஸ், பாக்டீரியாவால் காய்ச்சல் பாதிப்பு

தமிழகத்தில் 60 வகை வைரஸ், பாக்டீரியா பாதிப்பு
தமிழகத்தில் 60 வகை வைரஸ், பாக்டீரியா பாதிப்பு

தமிழ்நாட்டில் 60 வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள அரசு, 3 மாதங்களில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொண்டை வலியுடன் காய்ச்சல், இருமல், சளி, சோர்வு உள்ளிட்ட உடல் உபாதைகளால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக டெங்கு, மலேரியா, டைபாய்டு, எலி காய்ச்சல், ஸ்கிரப் டைபஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகள் அதிகம் பரவி வருகின்றன. இவ்வகையான காய்ச்சல்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும்.

அலட்சியம் காட்டினால் உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்நிலையில் வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்புகளால் ஏற்படும் காய்ச்சல்கள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 102 டிகிரிக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 60 வகை வைரஸ், பாக்டீரியா பாதிப்பு
தமிழகத்தில் 60 வகை வைரஸ், பாக்டீரியா பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தொடர் சிகிச்சை எடுத்தாலும், பாதிப்பு அவ்வளவு எளிதாக கட்டுக்குள் வராதது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மழைக்காலம் தொடங்க உள்ளதால் காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 வைரஸ்
வைரஸ்

இந்நிலையில் தமிழ்நாட்டில் 60க்கும் மேற்பட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்புகள் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியா காய்ச்சல், சர்வதேச போக்குவரத்து காரணமாக தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளது எனவும், ஆனால் அவை, கொரோனா போன்று பெருந்தொற்றாக மாறுவதற்கு வாய்ப்பில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் வரும் 3 மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் எனவும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் இருந்தால், சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in