
கொரோனா தடுப்பூசியால் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் முன்பு மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. இளைஞர்கள், அவ்வளவு ஏன் சிறியவர்கள் மத்தியிலும் கூட மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது.
அதிலும் கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் இதுபோல ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் கூட யாருக்கும் உறுதியாக என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி காரணமாகத்தான் மாரடைப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. அதில், ''உண்மையில் கொரோனா தடுப்பூசி திடீர் மரண ஆபத்தைக் குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, அதிக உடல் உழைப்பு, வேறு சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அமைகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!