திருமங்கலத்தில் களைகட்டிய சந்தை: பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

திருமங்கலம் ஆட்டுச்சந்தை
திருமங்கலம் ஆட்டுச்சந்தை
Updated on
2 min read

பொங்கல் பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருமங்கலம் ஆட்டுச்சந்தை
திருமங்கலம் ஆட்டுச்சந்தை

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாகக் கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடு, கோழிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

திருமங்கலம் ஆட்டுச்சந்தை
திருமங்கலம் ஆட்டுச்சந்தை

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய ஆட்டுச் சந்தையில் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது. இன்று 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையானது.

வழக்கமாக ஆட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை விற்கப்படும். ஆனால், தற்போது ரூ.13,000 முதல் ரூ.35,000 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இன்று ரூ.5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமங்கலம் ஆட்டுச்சந்தை
திருமங்கலம் ஆட்டுச்சந்தை

கட்டுக்கடங்காத கூட்டத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை சற்று கூடுதலாக இருப்பதாக வியாபாரிகள் கூறினர். பொங்கலுக்குப் பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'...பிரேமலதா விஜயகாந்தை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜை... தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!

எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயு...பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு!

அதிர்ச்சி... பயங்கர விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!

டென்னிஸ் மைதானத்தில் கிரிக்கெட்... ஜோகோவிச், ஸ்டீவ் ஸ்மித் அலப்பறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in