அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிறுத்தி கொள்ளை லாபம்... பங்குச்சந்தையில் அள்ளித்தந்த பங்குகள்

அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிறுத்தி கொள்ளை லாபம்... பங்குச்சந்தையில் அள்ளித்தந்த பங்குகள்

அயோத்தி ராமர் கோயில் விழாவினை முன்னிறுத்தி இந்திய பங்குச்சந்தையில், கடந்த சில மாதங்களில் பல்வேறு பங்குகள் பெரும் லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு வாரித் தந்துள்ளன.

அரசியல், சமூகம், இயற்கை சூழல், அரசின் அறிவிப்புகள் என சகலமும் பங்குச்சந்தைகளில் எதிரொலிப்பதுண்டு. இந்த வகையில் குறிப்பிட்ட பங்குகள் பெரும் ஏற்றம் காண்பதோ, வெகுவாய் சரிவதோ நடக்கும். பங்குச்சந்தையின் முதலீட்டாளர்கள் முதல் தினசரி வர்த்தகம் மேற்கொள்வோர் வரை அந்த சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட பங்குகளை வாங்கவோ, விற்கவோ செய்வார்கள்.

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

அயோத்தி ராமர் கோயிலுக்கான குடமுழுக்கு விழா அறிவிப்பானது முதலே குறிப்பிட்ட பங்குகள், தம்மை நம்பியோருக்கு லாபத்தை அள்ளித் தந்துள்ளன. அவற்றில் பிரதானமானவை பயணம் சார்ந்தவை. ஆன்லைன் பயணத் திட்டமிடல் நிறுவனமான ’ஈஸி ட்ரிப் பிளானர்ஸ்’, கடந்த அக்டோபரில் தொடங்கி தற்போது வரை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. போட்டி பயணத் திட்டமிடல் நிறுவனங்களை முந்திக்கொண்டு, அயோத்திக்கான பயணத் திட்டங்களை வகுத்து, பல சலுகைகளுடன் அவற்றை அறிவித்ததில் வெகுவாய் முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்தது.

இதே வகையில் ’தாமஸ் குக் இந்தியா நிறுவன’த்தின் பங்குகளும் வெகுவாய் உயர்வு கண்டன. அயோத்திக்கான பயணத் திட்டங்களில் சாமானியருக்கு உவப்பளிக்கும் பட்ஜெட் திட்டங்களை தாமஸ் குக் இந்தியா வெளியிட்டதில் பெரும் வரவேற்பை பெற்றன. கடந்த அக்டோபரில் தொடங்கி தற்போது வரை சுமார் 35 சதவீதம் இவை உயர்வு கண்டன. தற்போது தனது ஆயுட்கால உச்சத்தை இந்த நிறுவனம் எட்டியதில் அதன் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இண்டிகோ ஏர்லைன்ஸில் தனது இருப்பை அதிகரித்திருக்கும் ’இன்டர் க்ளோப் ஏவியேசன்’ நிறுவனத்தின் பங்குகள் இதே போன்று 27 சதவீதம் உயர்வு கண்டுள்ளன. அயோத்திக்கான பயணிகள் விமான சேவையை இண்டிகோ அறிவித்தது முதலே அதன் பங்குகள் உயர்வு காண ஆரம்பித்தன. இதே போன்று அயோத்தி விழாவை முன்னிட்டு 41 சதவீதம் அளவுக்கு உயர்வு கொண்டதில் ’அலைடு டிஜிட்டல் சர்வீஸஸ் நிறுவனம்’ முன்னிலை வகிக்கிறது. அயோத்தியை ஒட்டிய ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்துக்கான ஒப்பந்தத்தை வென்ற வகையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த நிறுவனம் பெற்றது.

மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை

இந்த வரிசையில், அயோத்தியில் முகாமிட்டுள்ள கட்டுமான நிறுவனங்கள், அதன் வளர்ச்சியுடன் தொடர்புடைய இதர நிறுவனங்கள், சுற்றுலா, ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் போன்றவையும் பங்குச்சந்தையில் வளர்ச்சி கண்டுள்ளன. இவை அனைத்துமே சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் என்பதாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன. புத்தாண்டு பிறந்ததில் வரலாற்று சாதனையாக உயர்வு கண்டு வந்த பங்குச்சந்தைகள், ஒரு வார காலமாக சரிவு கண்டபோதும் இந்த பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தந்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... பக்தி பரவசமூட்டும் புகைப்படத்தொகுப்பு!

பகீர்... காரில் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக ரூ.1.90 கோடி ஹவாலா பணம் கடத்தல்: இருவர் கைது!

சிறுக சிறுக பணம் சேமிப்பு... கோவாவிற்கு விமானத்தில் பறந்த பீடி சுற்றும் தொழிலாளர்கள்!

அதிர்ச்சி... கார்ட்டூன் பார்த்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு!

குடித்துவிட்டு வந்து தினமும் தாக்குவார்: நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in