குட்நியூஸ்: பி.எஃப் வட்டித் தொகை இந்த மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும்!

வருங்கால வைப்பு நிதி அலுவலகம்
வருங்கால வைப்பு நிதி அலுவலகம்

ஊழியர்களின் பி.எஃப் கணக்கில் இருப்பு உள்ள பணத்திற்கான வட்டித் தொகை விரைவில் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை வருங்கால வைப்பு நிதி(EPFO) அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் பி.எஃப் வட்டித் தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது.இந்த தொகை இந்த மாதமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பல மாதங்களுக்கு முன்பு, பிஎஃப் (PF) கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டித் தொகை பற்றிய தகவலை அரசாங்கம் அறிவித்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து பல நாட்களாக தங்கள் பிஎஃப் கணக்கில் வட்டித் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். அரசாங்கம் மிக விரைவில் வட்டித் தொகையை பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் டெபாசிட் செய்யும் என இப்போது கூறப்பட்டுள்ளது.  

2022-2023-ம் நிதியாண்டுக்கான ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக  நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த  வட்டித்தொகை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நவம்பர் இறுதிக்குள் இந்த வட்டித்தொகை அனைத்து சந்தாதாரர்களின் கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்பட்டுவிடும் என நம்பப்படுகின்றது. 

பிஎஃப் சந்தாதாரர்களின கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். இந்த தொகை அனைவருக்கும் மாறுபடும். இது ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை பொறுத்தது.

சில உதாரணங்கள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத விகிதத்தில் ரூ.33,000 வட்டித் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும்.

கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், வட்டியாக சுமார் ரூ.42,000 கிடைக்கும். ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், சுமார் ரூ.50 ஆயிரம் வட்டியாக டெபாசிட் செய்யப்படும். கணக்கில் இபிஎஃப்ஓ தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உமாங் செயலி மூலமாக அல்லது EPFO இணையதளம் மூலம்  எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் வாசிக்கலாமே...

கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!

தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!

பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in