அரசின் அடுத்த தங்கப் பத்திர திட்டம் ஆரம்பம்... விலையில் தள்ளுபடியுடன், அரையாண்டு வட்டியும் கிடைக்கும்

தங்கப் பத்திர திட்டம்
தங்கப் பத்திர திட்டம்

தங்கம் வாங்க தங்கமான வாய்ப்பாக மத்திய அரசின் தங்கப் பத்திர திட்டத்தில், இந்த நிதியாண்டின் நான்காவது தங்கப் பத்திரம் நாளை மறுநாள்(பிப்.12) வெளியாகிறது.

நடப்பு நிலவரத்தில் ஆபரணம் என்பதற்கு அப்பால், சேமிப்பு மற்றும் முதலீட்டு நோக்கத்திலும் தங்கத்தை வாங்கும்போக்கு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலையில் எகிறும் தங்கமும், அதன் அதிகரிக்கும் தேவைகளும், அவசர காலத்தில் பேருதவியாக அமைவதுமாக, தங்கத்தின் பலன்கள் அநேகம். ஆனால் சேமிப்பு மற்றும் முதலீட்டு நோக்கில் தங்கத்தை வாங்கி பத்திரப்படுத்துவது மிகவும் கடினம். அவ்வாறானவர்களுக்கு உதவ அரசின் தங்கப் பத்திர திட்டம் காத்திருக்கிறது.

தங்கப் பத்திரம் முதலீடு
தங்கப் பத்திரம் முதலீடு

அவ்வப்போது அறிவிப்பாகும் இந்த தங்கப்பத்திர திட்டத்தின் வரிசையில், இந்த நிதியாண்டின் நான்காம் கட்ட திட்டம் நாளை மறுநாள் நடைமுறைக்கு வருகிறது. பிப்ரவரி 12 தொடங்கி 16 வரை, தங்கப் பத்திர திட்டத்தின் கீழ் தங்கம் வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ரூ6,263 என்ற விலையில் ஒரு கிராம் தங்கத்தை பெறலாம். இதையே ஆன்லைன் வாயிலாக பெற விரும்புவோருக்கு கிராமுக்கு ரூ50 தள்ளுபடியுடன் கிடைக்கும். இவர்கள் ரூ.6,213 என்ற விலை ஒரு கிராம் தங்கத்தை பெறலாம்.

இந்த தள்ளுபடிக்கு அப்பால் ஆண்டுதோறும் இரு முறை வட்டியும் பெறலாம். தங்க பத்திர முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டியை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம். 8 வருடங்கள் கழித்து அன்றயை தேதியின் 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். விரும்புவோர் தங்கமாகவும் கோரிப் பெறலாம். ஆன்லைன் தள்ளுபடி அனுகூலத்தை பெறவிரும்புவோர், தங்களது பங்குச்சந்தை பரிவர்த்தனைக்கான டீமேட் கணக்கு மூலம் வாங்கி இருப்பு வைக்கலாம்.

நேரில் சென்று தங்கப்பத்திரத்தை பெற விரும்புவோர் அடுகிலுள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது ரிசர்வ் வங்கி கிளைகளை அணுகலாம். தங்கப்பத்திர விண்ணப்பத்துக்கு ஆதார் அட்டை, பான்கார்டு போன்றவற்றின் நகல்கள் அவசியம். பத்திரம் வடிவில் கிடைக்கும் தங்கத்தை பத்திரப்படுத்துவது சுலபம். ஆபரணத் தங்கதின் செய்கூலி, சேதாரம் பெயரிலான பகல் கொள்ளைக்கும் இதில் வாய்ப்பில்லை. தங்கப் பத்திரத்தை தனிநபர்கள் 4 கிலோ வரையிலும், நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் பெயரில் வாங்குவோர் அதிகபட்சமாக 20 கிலோ வரையிலும் அதிகபட்சமாக வாங்க இயலும்.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in