ரூ.8 லட்சம் கோடி மாயம்... பாதாளத்தில் தொடர்ந்து சரியும் பங்குச்சந்தை

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு

கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரத்தின் முதல் நாளும் பங்குச்சந்தை வர்த்தகம் பெரும் சரிவு கண்டிருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நேற்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த வாரம் நெடுக பங்குச்சந்தை பெரும் சரிவு கண்டிருந்ததால், இந்த வாரத்தின் தொடக்கம் குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு வர்த்தகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர்கள் பயந்தது போலவே சந்தை மற்றுமொரு பாதள சரிவினை இன்று பங்குச்சந்தை எட்டியது. இன்றைய நாள் வர்த்தகத்தின் முடிவில் முதலீட்டாளர்களின் 8,50,820 கோடி ரூபாய் மாயமாகி உள்ளது.

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை

ஜன.23 வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டதில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் தனது ஒரு மாதத்து குறைந்தபட்ச அளவாக 70,419 என்பதை எட்டியது. புத்தாண்டு பிறந்தது முதலே எழுச்சியுடன் இருந்த சந்தை, அதன் புதிய வரலாற்று சாதனையாக 73,000க்கு மேலான புள்ளிகளை எட்டிய சில தினங்களில் இந்த சரிவு கண்டுள்ளது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஜனவரி தொடக்கத்தில் கண்ட புதிய உயர்வை வெகு சீக்கிரமே கை நழுவ விட்டுள்ளன. கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 தினங்களுக்கு ரத்தக்களரியான பங்குச்சந்தை, பின்னர் வெள்ளியன்று சுமாராக மீண்டு போக்கு காட்டியது. தற்போது முன்னைவிட மோசமாக சரிந்து இன்றைய தினம் மற்றுமொரு பெரு வீழ்ச்சி கண்டிருக்கிறது.

சந்தையின் வீழ்ச்சிக்கு கடந்த வாரத்தின் முக்கிய காரணமான ஹெச்டிஎப்சி பங்குகள் சரிவே இந்த வாரத்தின் தொடக்க சரிவுக்கும் காரணமானது. ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் சுமார் 3 சதவீதம் சரிந்தன. இதனைத் தொடர்ந்து சந்தையின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவீதம் சரிந்ததில் சந்தையில் தள்ளாட்டம் நிலவியது. ஹெச்டிஎப்சியைத் தொடர்ந்து சந்தையின் சரிவுக்கு இரண்டாவது பெரும் காரணமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு

கடந்த வாரத்து சரிவின் எதிரொலியால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு பங்குகளை விற்று வெளியேறினார்கள். இந்த ஜனவரியில் மட்டும் இதுவரை ரூ23 ஆயிரம் கோடிக்கும் அதிகமான இந்தியப் பங்குகளை அவர்கள் விற்று வெளியேறி உள்ளனர். இன்னொரு அன்னிய காரணமாக, காஸாவில் உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்களால், கச்சா எண்ணெய் விலை உயர்வு கண்டிருப்பது, செங்கடல் மார்க்கத்திலான சரக்கு கப்பல்கள் பயணம் சவாலானதில் தடைபட்ட ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் உள்ளிட்டவையும் பங்குச்சந்தையின் சரிவுக்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


வசீகரிக்கும் வீடியோ... ஏஐ தொழில்நுட்பத்தில் கண் சிமிட்டி, புன்னகைக்கும் அயோத்தி ராமர்!

பெண்களுக்கு சினிமா ஆசைகாட்டி மோசம்... ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் கைது!

எலும்பு முறிவு; படுத்த படுக்கையான அருண்விஜய்... வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

உஷார்... டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 3 வயது குழந்தை பலியான சோகம்!

அதிகளவில் மது; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேக்ஸ்வெல்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in