தமிழகத்தில் செப்டம்பர் மாதம் ரூ.10,481 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்!

ஜிஎஸ்டி வருவாய்
ஜிஎஸ்டி வருவாய்

செப்டம்பர் மாதம் தமிழகத்தில் மட்டும் ரூ.10,481 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப்படையில் அமல்படுத்தபட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை நேற்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது.

கடந்த மாதம் சி.ஜி.எஸ்.டி எனப்படும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி வாயிலாக 29,818 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. எஸ்.ஜி.எஸ்.டி எனப்படும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி வாயிலாக 37,657 கோடி ரூபாய் வசூலானது. பொருட்கள் இறக்குமதி வாயிலாக கிடைத்த வருவாய் உட்பட ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி வாயிலாக 83,623 கோடி ரூபாயும், செஸ் வரி வாயிலாக 11,613 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளன.

மொத்தமாக, ஜி.எஸ்.டி., வரி வாயிலாக 1.63 லட்சம் கோடி ரூபாய் கடந்த மாதம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையைவிட இது 10 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வசூல், 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவது இது நான்காவது முறை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கடந்த மாத ஜி.எஸ்.டி யாக, 10,481 கோடி ரூபாய் வசூலானதாக நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜிஎஸ்டி வருவாய்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
ஜிஎஸ்டி வருவாய்
’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!
ஜிஎஸ்டி வருவாய்
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
ஜிஎஸ்டி வருவாய்
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
ஜிஎஸ்டி வருவாய்
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in