பரமபதம் ஆடும் தங்கம்... ஒரே நாளில் சவரனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது!

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

தங்கத்தின் விலையானது இன்றைய தினம் கிராமுக்கு 145 ரூபாயும், சவரனுக்கு 1,160 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வந்தது. மார்ச் மாதம் 28-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 6,250 ரூபாயை எட்டியது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஏப்ரல் 19-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு சவரன் 55,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று சரிந்து வருகிறது. நேற்று 6,845 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் தடாலடியாக 145 ரூபாய் குறைந்து 6,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,160 குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று கணிசமாக சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 2.50 பைசா குறைந்து, 86 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 2,500 ரூபாய் குறைந்து 86 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியைத் தொடர்ந்து பிளாட்டினமும் இன்று சற்று விலை சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் பிளாட்டினம் நேற்று 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 62 ரூபாய் குறைந்து 2,438 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in