ஏறுமுகத்தில் தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

தங்கம்
தங்கம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும், ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.75ம், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.93ம் குறைந்து விற்பனையாகி வந்தது. வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.9 உயர்ந்து, ரூ.5,695க்கும் ஒரு சவரன் ரூ.72 உயர்ந்து ரூ.45,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்
தங்கம்

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கநகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!

குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?

அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!

ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in