குட்நியூஸ்: தீபாவளி பண்டிகைக்கு அதிரடி ஆஃபர் அறிவித்த வங்கிகள்!

 பாரத ஸ்டேட் பேங்க்
பாரத ஸ்டேட் பேங்க்

தீபாவளியை முன்னிட்டு வீட்டுக்கடன், கார் கடனுக்கு பல அதிரடி ஆஃபர்களை வங்கிகள் அறிவித்துள்ளன.

தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன. இந்த நிலையில், பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் கார் கடன்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி டேர்ம் லோன்களில் மீது சூப்பரான தள்ளுபடிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் தள்ளுபடிகளை பெறுவார்கள் என அறிவித்துள்ளது. அதன்படி சிபிள் மதிப்பெண் 700 மற்றும் 749-க்கு இடையில் இருந்தால், வாடிக்கையாளர்கள் 8.7 சதவீத வட்டி விகிதத்தில் டேர்ம் லோனைப் பெறலாம்.

இது நடைமுறையில் உள்ள 9.35 சதவீதத்தில் இருந்து குறைகிறது. வாடிக்கையாளர்கள் 750 முதல் 799 வரை கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அவர்கள் 8.6 சதவீத வட்டி விகிதத்தில் டேர்ம் லோன்களைப் பெறலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

இதே போல பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) இந்த முறை 8.7 சதவீத தொடக்க வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்தக் கடனைப் பெறத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் செயலாக்கக் கட்டணம் (Processing fee) மற்றும் ஆவணக் கட்டணங்களில் தள்ளுபடியையும் பெறுவார்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது.

அவர்கள் பிஎன்பியிலிருந்து 8.4 சதவீத வட்டி விகிதங்களுடன் வீட்டுக் கடனைப் பெறலாம். மேலும் வீட்டுக் கடன்கள் மீது செயலாக்கக் கட்டணங்கள் அல்லது ஆவணக் கட்டணங்கள் எதுவும் இல்லை என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in