
பல்வேறு காரணங்களின் அடிப்படையில், 35 லட்சம் பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் வழங்கப்படாது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்குகளின் பொருந்தாத தன்மை மற்றும் சரிபார்ப்புகளில் தாமதம் காரணமாக, வருமான வரித்துறையிடம் ரீஃபண்ட் வழங்குவதற்கான சுமார் 35 லட்சம் வழக்குகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்தகையோருக்கு இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தடங்கல்களை சரி செய்ய முயன்று வருவதாக நிதின் குப்தா தெரிவித்துள்ளார். இவை முறையாக முடிந்ததும் வரி செலுத்துவோரின் சரியான வங்கிக் கணக்குகளில் ரீஃபண்ட் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
”இதற்காக மைசூரை அடிப்படையாகக் கொண்ட கால் சென்டர் ஒன்றும் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இதுபோன்ற 1.4 லட்சம் நபர்களின் ரீஃபண்ட் விவகாரங்கள் கால் சென்டர் வாயிலாக தீர்க்கப்பட்டுள்ளன.
பதிவேடுகளை புதுப்பிப்பது மட்டுமன்றி வரி செலுத்துவோர் தங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்காதது, முறையான வங்கி கணக்கை இணைக்காதது, குடியிருப்பு அல்லது நகரங்களை மாற்றியது, வங்கியின் பிரத்யேக IFSC எண் மாறியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தடங்கல் ஏற்படுகிறது.
கால் சென்டர் தொடர்புகள் வாயிலாக இந்த தடங்கல்கள் களையப்பட்டு விரைவில் வருமான வரி ரீஃபண்ட், உரியவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்” எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா உறுதியளித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!