அழுத்தித் தேய்த்தால் வீக்கம் போய்விடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-27

அழுத்தித் தேய்த்தால் வீக்கம் போய்விடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-27

நம்பிக்கை:

"பிறந்த குழந்தைக்கு மார்பகத்தில் வீக்கம் என்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். குழந்தையை அழுத்தித் தேய்த்தால் வீக்கம் போய்விடும்.”

உண்மை:

பிறந்த குழந்தைக்கு மார்பகத்தில் காணப்படும் சிறிய வீக்கம் பாதிப்பை ஏற்படுத்துவதை விட, அந்த வீக்கத்தைச் சீராக்குகிறேன் என்று அதை அழுத்தித் தேய்ப்பதால் ஏற்படும், மார்பகங்களில் Breast Abscess எனும் சீழ்கோத்த நிலைதான் உண்மையிலேயே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தாயின் வயிற்றில், தாயின் அதிக அளவு ஹார்மோன்களுடன் இருக்கும் குழந்தை, பிறந்த பின் இந்த ஹார்மோன்களின் ஆதிக்கம் குறைவதால், லேசான மார்பக வீக்கம் மற்றும் பெண் குழந்தைகளில் பிறப்புறுப்பில் லேசான இரத்தக்கசிவு அல்லது வெள்ளைப்படுதலுடன் காணப்படலாம்.

தற்காலிகமான இந்த நிலை, 4 அல்லது 5 நாட்களில் முற்றிலும் மறைந்துவிடும் என்பதால், இதற்குத் தேவை எல்லாம் (Reassurance) பெற்றோர் இந்த நிலையைப் பற்றி மருத்துவரிடம் கேட்டுத் தெளிவது மட்டுமே.

ஆனால், அப்படிக் கேட்டுத் தெளிவதற்கு முன்பாகவே குழந்தைக்கு ஒத்தடம் தந்து, ஆப்செஸ் உண்டாக்கி, அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலைவரை கொண்டுசென்று விடுவதைக் காணும்போது தான் நமது வேதனையும் அதிகமாகி விடுகிறது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
அழுத்தித் தேய்த்தால் வீக்கம் போய்விடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-27
குழந்தையை வெயிலில் காட்டினால் காமாலை குணமாகும்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-26

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in