பார்லி கஞ்சி எனும் பாட்டி வைத்தியம்!: அவ(ள்) நம்பிக்கைகள்-32

பார்லி கஞ்சி எனும் பாட்டி வைத்தியம்!: அவ(ள்) நம்பிக்கைகள்-32

நம்பிக்கை:

”பார்லி கஞ்சி உட்கொண்டால் கால் வீக்கம் குறையும்!”

உண்மை:

கர்ப்பகாலத்தில், 7 மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் வயிற்றின் எடை காரணமாக, கால்களில் வீக்கம் தோன்றுவது இயல்பான ஒன்றுதான். மேலும் இது இரட்டைக் குழந்தைகள், பனிக்குட நீர் அதிகமுள்ள தாய்மார்களுக்கு இன்னும் சற்று கூடுதலாகவே காணப்படும்.

அத்துடன் கர்ப்பகால ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய், ரத்தசோகை, கர்ப்பகால வெரிக்கோஸ் வெயின்ஸ் எனும் புடைப்புச் சிரைகள் ஆகிய நிலைகளில் அதிகப்படியான கால் வீக்கம் காணப்படும். அத்துடன் வயிறு, முதுகு மற்றும் தொடைப் பகுதிகளிலும் வீக்கம் காணப்படலாம். இவற்றுக்கான பாட்டி வைத்தியமாகப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது பார்லி கஞ்சிதான்.

உண்மையில், கோதுமையைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த பார்லி எனும் வாற்கோதுமையானது அதிக நார்ச்சத்து, அதிக கலோரிகள், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் அடங்கிய உணவாகும். இதில் தயாரிக்கப்படும் பார்லி தண்ணீர் அல்லது பார்லி கஞ்சி, சிறுநீர் போவதை அதிகப்படுத்தும். இதனால் சிறுநீர்த் தொற்று, சிறுநீரக கல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது என்றாலும், கர்ப்பகால கால் வீக்கத்தை இது குறைக்காது என்பதே உண்மை.

மேலும், அதிக அளவு பார்லி நீரை உட்கொள்ளும்போது, அது அடிக்கடி சிறுநீர் கழிக்க வைப்பதால் நீர்த்தன்மை குறையும் நிலையும் (dehydration) ஏற்படக்கூடும் என்பதால், கர்ப்பகாலத்தில் மிதமான அளவில் மட்டுமே பார்லி உண்பதே நல்லது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
பார்லி கஞ்சி எனும் பாட்டி வைத்தியம்!: அவ(ள்) நம்பிக்கைகள்-32
கர்ப்பகாலத்தில் சுய மருத்துவம் செய்வதா?: அவ(ள்) நம்பிக்கைகள்-31

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in