கேஎஸ்ஆர்டிசி பேருந்து
கேஎஸ்ஆர்டிசி பேருந்து

கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் சிற்றுண்டி இனி கிடைக்கும்... கேரள அரசு அசத்தல் திட்டம்!

கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) பேருந்துகளில் சிற்றுண்டி விற்பதற்கான திட்டத்தை மாநில அரசு கொண்டு வர உள்ளது.

கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளுக்குச் சுத்தமான குடிநீரை உறுதி செய்வதற்காக குடிநீர் வழங்கல் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சூப்பர் பாஸ்ட் பேருந்து முதல் ஹைரேஞ்ச் வரை அனைத்து பேருந்துகளிலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 என்ற விலையில் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிற்றுண்டி (தின்பண்டங்கள்) விற்பனை செய்ய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

கேஎஸ்ஆர்டிசி பேருந்து, தின்பண்டங்கள்.
கேஎஸ்ஆர்டிசி பேருந்து, தின்பண்டங்கள்.

இதற்கான சிற்றுண்டிகளை விநியோகிக்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து திட்ட விளக்கம் மற்றும் ஆலோசனைகளை கேஎஸ்ஆர்டிசி கேட்டுள்ளது. பேருந்துகளில் தின்பண்டங்கள் விநியோகிப்பதற்கான உணவு உள்ளிட்ட அலமாரிகள்/விற்பனை இயந்திரங்களை நிறுவ ஆர்வமுள்ளவர்களிடமிருந்து திட்ட விளக்கம் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.

அத்துடன் பயணத்தின்போது சிற்றுண்டிகளை பேக் செய்து எளிதாக வழங்குவதுடன் தரம் மற்றும் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். பேருந்தின் உள்ளே ஷெல்ஃப் வென்டிங் மெஷின் பொருத்த இடம் வழங்கப்படும். திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கேஎஸ்ஆர்டிசி இறுதி முடிவு எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான முன்மொழிவுகளை இம்மாதம் 24-ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் முன்னர் சமர்ப்பிக்குமாறு கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in