கேரளாவில் கனமழை... கோவைக்கு திருப்பி விடப்படும் விமானங்கள்!

கோழிக்கோட்டில் இருந்து கோவைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
கோழிக்கோட்டில் இருந்து கோவைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த 2 விமானங்கள் கோவை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வெப்ப அலை குறைந்து பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாநிலங்களில் புழுதிப் புயல் தாக்குதல் இருந்து வரும் நிலையில், தென் மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

கோழிக்கோடு விமான நிலையம்
கோழிக்கோடு விமான நிலையம்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயில் குறைந்து மக்கள் சற்றே ஆசுவாசமடைந்துள்ளனர். இதனிடையே கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்

இன்று காலை துபாய் மற்றும் தம்மாம் ஆகிய வளைகுடா நாடுகளின் நகரங்களில் இருந்து இரண்டு விமானங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டன. காலை 7 மணி அளவில் இந்த விமானங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முயற்சித்துள்ளன. அப்போது மோசமான வானிலை நிலவியதால் ஓடுதளம் தெரியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த விமானங்கள் கோவை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய இரண்டு விமானங்களும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு வானிலை சீரானதை அடுத்து மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கிளம்பிச் சென்றன.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in