பிக்பாஸில் முதல் நபராக வெளியேறிய பிரபலம் இவர்தான்?

பிக்பாஸில் முதல் நபராக வெளியேறிய பிரபலம் இவர்தான்?

பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரம் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து யுகேந்திரன் எவிக்ட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் கோலாகலமாகத் தொடங்கியது. கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்சன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா உள்ளிட்ட 18 பேர் முதல் நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்தனர்.

முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டுக்குள் ஏராளமான கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் நடந்து வந்த சூழலில் முதல் வார நாமினேஷன் பட்டியலில் பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட ஏழு பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். பொதுவாக முதல் வாரத்தில் நாமினேஷன் நடைபெற்றாலும் எவிக்ஷன் நடக்காது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்று இருந்தவர்களில் யுகேந்திரன் வாசுதேவன் மற்றும் அனன்யா ராவ் மற்றவர்களை காட்டிலும் குறைவான வாக்குகளை பெற்று இருந்ததால் அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றபடுவார் என யூகிக்கப்பட்டது. இருப்பினும் யார் முதல் வாரத்தில் எவிக்ட் ஆவார் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரம் முடிவடைந்த நிலையில் இன்று கமல்ஹாசன் கலந்து கொண்ட எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யுகேந்திரன் எவிக்ட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த பிரபலமான பாடகரான மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் ஏராளமான பாடல்களை பாடியும் உள்ளார் படங்களில் நடித்தும் உள்ளார். ஒரு நடிகராக பலருக்கும் பரிச்சயமானவர், ஆனால் அவர் ஒரு பாடகர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை.

யுகேந்திரன்
யுகேந்திரன்

சில தினங்களுக்கு முன்னர் யுகேந்திரனின் மனைவி அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது குறித்து வெளிப்படையாக பேசிய தகவல்கள் இணையத்தில் வைரலானது. அதில் அவருடைய நண்பர்களான வெங்கட் பிரபு, சரண் உள்ளிட்டோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளனர். அதற்கு காரணம் அவர் குடும்பம் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர்கள் குடும்பத்தினரை விட்டு விலகி இருக்க முடியாது என்பதை நன்கு அறிந்ததால் அவர்கள் அப்படி கூறியுள்ளனர்.

யுகேந்திரன் பிடிவாதத்தால் ஒகே சொல்லி வாழ்த்தி அனுப்பியுள்ளனர். இருப்பினும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பல போட்டியாளர்கள் டீனேஜ் குரூப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் யுகேந்திரன் எத்தனை நாட்கள் தாக்கு பிடிப்பார் என தெரியவில்லை. அதனால் அவர் சீக்கிரமாகவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என கூறியிருந்தார் யுகேந்திரனின் மனைவி மாலினி. யுகேந்திரனின் மனைவி கணித்தது போலவே முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் யுகேந்திரன் வாசுதேவன் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in