நான் ஆடைகளை மாற்றும் போது... தயாரிப்பாளர்கள் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு!

நடிகை கிருஷ்ண முகர்ஜி
நடிகை கிருஷ்ண முகர்ஜி

பாலியல் ரீதியாக தான் எதிர்கொண்ட துன்புறுத்தலால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் இதற்கு காரணமான தயாரிப்பாளர் ஒருவரையும் சின்னத்திரை நடிகை கிருஷ்ண முகர்ஜி வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை கிருஷ்ண முகர்ஜி தனது ‘சுப் ஷகுன்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நடிகை கிருஷ்ண முகர்ஜி. தனது சமூகவலைதளப் பக்கத்தில், நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒரு நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார்.

கிருஷ்ண முகர்ஜி தனது மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவதைப் பற்றி மனம் திறந்து, தனது கவலைக்கு ‘சுப் ஷகுன்’ தயாரிப்பாளர்களைக் குற்றம் சாட்டினார். அவர் தனது கடினமான காலங்களைக் கடந்து வருவது பற்றியும், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் பற்றியும் குற்றம் சாட்டினார்.

"எனது மனதில் இருக்கும் விஷயங்களை பற்றி சொல்ல எனக்கு இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை. ஆனால் இன்று நான் அதைத் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

நான் கடினமான காலங்களைக் கடந்துதான் வந்திருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு எளிதாக இல்லை. நான் தனிமையில் இருந்தபோது மனச்சோர்வுடனும், கவலையுடனும், மனதுக்குள் அழுதேன். தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான ’சுப் ஷகுன்’ நிகழ்ச்சியை நான் செய்யத் தொடங்கியபோது இந்த மனச்சோர்வு எனக்குத் தொடங்கியது.

அது என் வாழ்வின் மிக மோசமான முடிவு. ஆனால் நான் மற்றவர்களைக் கேட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னைப் பலமுறை துன்புறுத்தியுள்ளனர்.

நடிகை கிருஷ்ண முகர்ஜி
நடிகை கிருஷ்ண முகர்ஜி

ஆடைகளை மாற்றும் போது, அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர். 5 மாதங்களாக இன்றுவரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனது கட்டணத்தை அவர்கள் செலுத்தவில்லை. இதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கு பலமுறை சென்றும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.

நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன். இதுதொடர்பாக நான் பலரிடம் உதவி கேட்டேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை. நான் ஏன் எந்த நிகழ்ச்சியும் செய்யவில்லை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதுதான் காரணம். எனக்கு பயமா இருக்கு. அதே மாதிரி மீண்டும் நடந்தால் என்ன ஆகும்?? எனக்கு நீதி வேண்டும்’ என வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in