இன்று உலக அறிவியல் தினம்... இது அமைதி மற்றும் வளர்ச்சிக்கானது!

ஆக்கபூர்வ அறிவியல்
ஆக்கபூர்வ அறிவியல்

அறிவியல் இல்லாத வாழ்க்கையை இக்காலத்தில் எவரும் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. அந்தளவுக்கு வாழ்க்கையோடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பின்னிப் பிணைந்திருக்கிறது. அத்தகைய அறிவியலை ஆக்கபூர்வமான வகையில், அமைதி மற்றும் வளர்ச்சிக்கான தினமாக நவ.10 அன்று அனுசரிக்கிறோம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய படைப்பு அல்லது கண்டுபிடிப்பு இல்லாது நடப்பு உலகம் இல்லை. புதியதை உருவாக்குவது மட்டுமன்றி முந்தையதை புதுப்பிப்பதிலும் அறிவியலின் பங்கு அளப்பரியது. இத்தகைய அறிவியலும் ஆக்கபூர்வமாக அமைவதை, 'அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினமாக' இன்று கொண்டாடுகிறோம்.

உலக அறிவியல் தினம்
உலக அறிவியல் தினம்

இன்றைய தினத்தின் முக்கிய நோக்கம் ஆக்கபூர்வமான அறிவியல் மட்டுமன்றி, அறிவியல் துறையில் கண்டடைந்துள்ள முன்னேற்றங்களை கொண்டாடுவதும், அவற்றை சக மனிதர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதிலும் அமைந்திருக்கும்.

1999-ல் புதாபெஸ்டில் நடைபெற்ற உலக அறிவியல் மாநாட்டில், அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினத்துக்கான விதை விழுந்தது. அதன்படி 2001 முதல், நவ.10 தினத்தை உலகம் முழுவதும் அறிவியல் நோக்கிலான உறுதியான திட்டங்கள் மற்றும் நிதியளிப்பதற்கான ஆயத்தங்களுக்கு உரிய நாளாக யுனெஸ்கோ அறிவித்தது.

இந்த உலகம் எந்தவொரு தனி நபர், தனிக்குழு அல்லது தனி தேசம் மட்டுமே சுகித்திருப்பதற்காக உருவானதல்ல. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து ஆதாயங்களையும் பெற்று நம் அனைவருக்கும் வாழச் சிறந்த இடமாக பூமியை நம்பிக்கையுடன் மாற்ற இந்த நாளில் உறுதி பூணலாம்.

அறிவியல் தினத்தின் 2023ம் ஆண்டுக்கான போஸ்டர்
அறிவியல் தினத்தின் 2023ம் ஆண்டுக்கான போஸ்டர்

இதன்பொருட்டு நடப்பாண்டின் அமைதி மற்றும் வளர்ச்ச்சிக்கான உலக அறிவியல் தினத்தின் கருப்பொருளாக ‘அறிவியலில் நம்பிக்கையை உருவாக்குதல்’ என்பதை ஐநா பரிந்துரை செய்திருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் பெயரில் அவநம்பிக்கை அதிகரித்து வருவதன் மத்தியில், ’அறிவியலில் நம்பிக்கை உருவாக்குதல்’ மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in