எலெக்ட்ரானிக் தொழில்துறையில் எதிரொலித்த தைவான் நிலநடுக்கம்... பூதாகரமாகும் ‘சிப்’ தட்டுப்பாடு

தைவான் நிலநடுக்க பாதிப்புகள்
தைவான் நிலநடுக்க பாதிப்புகள்

தைவான் நிலநடுக்கம் காரணமாக ’சிப்’ உற்பத்தி நிறுவனங்கள் முடங்கிப் போயுள்ளன. இது மின்னணு பொருள் உற்பத்திக்கான விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் என்பதால், சர்வதேச அளவில் எலெக்ட்ரானிக் சந்தை பாதிப்பு காண இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கத்துக்கு நேற்று தைவான் ஆளானது. தைவானின் கிழக்கு கடற்கரையில் ஹுவாலியன் கவுண்டி அருகே புதன்கிழமை காலை 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மிகப்பெரும் நிலநடுக்கத்தால் ஒப்பீட்டளவில் உயிர்ப்பலிகள் குறைவு என்ற போதும், அதன் பக்கவிளைவுகள் தைவான் தொழில்துறையில் எதிரொலிக்கும் என்பது அந்நாட்டினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிப் உற்பத்தி
சிப் உற்பத்தி

நேற்றைய தைவான் நிலநடுக்கம், டிஸ்ப்ளே பேனல்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் விநியோகத்தை கடுமையாக்கத் தொடங்கி உள்ளது. உலகளாவிய மின்னணு தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் தைவான் பாதிப்பிலிருந்து விடுபடுவது குறித்து பரிதவித்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பாளாரான ’தைவான் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் நிறுவனம்’ ஆப்பிள் மற்றும் என்விடியா ஆகிய பெரு நிறுவனங்களுக்கு ’சிப்’களை வழங்குவதால், உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் தற்போது துண்டு விழுந்துள்ளது.

உலகளாவிய டெக் நிறுவனங்களுக்காக தைவானில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான சிப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவுட் சோர்ஸிங் முறையில் இந்த பிரபல நிறுவனங்களுக்கான ’சிப்’புகள் தைவானில் உற்பத்தியாகின்றன. தைவான் நிலநடுக்கம் அந்நாட்டினருக்கு, அங்குள்ள நிறுவனங்களுக்கும் புதிது அல்ல.

தைவானில் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் தொழிற்சாலைகளை நிர்மாணித்து வருகின்றனர். உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் தங்கள் உற்பத்தி மற்றும் கருவிகளுக்கு சேதத்தை குறைக்க தானியங்கி பணிநிறுத்தம் சார்ந்த சிஸ்டங்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒரு நிலநடுக்கம் எழுந்தால் அதிலிருந்து தைவான் விரைந்து விடுபட வாய்ப்பாகும். ஆனால் நேற்றைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தைவான் கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது.

தைவான்  நிலநடுக்க பாதிப்புகள்
தைவான் நிலநடுக்க பாதிப்புகள்

நிலநடுக்கம் காரணமாக சிப் தயாரிப்பு முடங்குவதால், அதன் ஏற்றுமதி பாதிக்கப்படும். உலகளாவிய சிப் தட்டுப்பாடு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் வாகன உற்பத்தி வரை எதிரொலிக்கும். இதற்கு முன்னதாக கொரோனா பரவல் காலத்தில், தைவான், சீனா உள்ளிட்டவற்றின் எலெக்ட்ரானிக் தொழிற்சாலைகள் முடங்கின. அப்போது வாகன உற்பத்தி ஸ்தம்பிக்கும் வகையிலும், பழுதான வாகனங்களுக்கான மின்னணு உதிரி பாகங்கள் தட்டுப்பாடால் அவை முடங்கியதும் நிகழ்ந்தது.

கொரோனா காலத்திலிருந்து பாடம் கற்ற பெருநிறுவனங்கள் தங்களுக்கான சிப் உற்பத்திக்கு குறிப்பிட்ட தேசத்தை மட்டுமே சார்ந்திராது, பரவலாக பல்வேறு தேசங்களில் இருந்தும் சிப் இறக்குமதிக்கு திட்டமிட்டன. அந்த வகையில் இந்தியாவின் சிப் உற்பத்தி நிறுவனங்களும் வாழ்வு பெற்றன. தற்போதைய தைவான் நிலநடுக்கம் அந்நாட்டை பாதிக்கக்கூடும் என்றாலும், இந்தியா போன்ற இதர ஆசிய நாடுகளுக்கு அவை வாழ்வளிக்கவும் வாய்ப்பாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in