குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடற்படை
இந்திய கடற்படை

இந்திய கடற்படையில் 4,108 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை
இந்திய கடற்படை

இந்த அறிவிப்பின்படி டெக் ரேட்டிங்(Deck Rating), எஞ்சின் ரேட்டிங்( Engine Rating),மாலுமி(Sea Man), சமையலர்(Cook) ஆகிய பதவிகளுக்கு தகுதியான பணியாளர்களை பணியமர்த்த உள்ளது. இங்கு மொத்தம், 4,108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு https://sealanemaritime.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்ச்சி சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், ஏப்ரல் 30, 2024 இன் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். விண்ணப்ப செயல்முறையை முடிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் பதவியைப் பொறுத்து ரூ 35.000 முதல் ரூ 55.000 வரை மாதச் சம்பளம் வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in