சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே எச்சரிக்கும் ஏஐ நுட்பம்... விரைவில் வெளியிடுகிறது கூகுள்

இணைய பாதுகாப்பு
இணைய பாதுகாப்பு

சைபர் செக்யூரிட்டி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூகுள் தனது பிரத்யேக செயற்கை நுண்ணறிவு உபாயங்களை களமிறக்க இருக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணி சார்ந்த அனுபவங்களை வரமாக மாற்றும் வசதியை கூகுள் வாரி வழங்கி வருகிறது. அதுவே எதிர்பாரா சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் போது பெரும் சாபமாகவும் அமைந்துவிடுகிறது. உலகளவில் பயனர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்து கூகுள் அனுகூலங்களால், ஹேக்கர்களும் தங்களது சைபர் தாக்குதல்களை நிகழ்த்த கூகுளை குறிவைத்து அங்கே முகாமிடுகிறார்கள். எனவே பயனர்களின் பாதுகாப்புகாக புதிய தற்காப்பு சாத்தியங்களை தொடர்ந்து கூகுள் பரிசோதித்து வருகிறது.

குகுள் பாதுகாப்பு
குகுள் பாதுகாப்பு

இந்த வகையில் தனது வழக்கமான சைபர் செக்யூரிட்டி அலகு, அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் நுண்ணறிவு அலகு, ஜெமினி ஏஐ மாதிரி ஆகியவற்றின் கூட்டணியில் புதிய தற்காப்பு படையை கூகுள் ஒருங்கிணைக்கிறது. பரிசோதனை அடிப்படையில் செயலாக்கத்தில் இருக்கும் இவை பயனர்களுக்கான பல்வேறு இணையப் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களை ஆராய்ந்து வருகின்றன.

பிப்ரவரியில் வெளியான ஜெமினி 1.5 ப்ரோ பெரும் மொழி மாதிரியை இதற்காக பிரதானமாக களமிறக்குகிறது. இந்த ஜெமின் 1.5 ப்ரோ மாதிரியானது ரேண்ட்சம் வேர் தாக்குதல்களை வெறும் 34 விநாடிகளில் பிரித்து மேய்ந்துவிடும் திறன் கொண்டது. இந்த ரேண்ட்சம்வேர் தாக்குதல்கள் 2017 வாக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் மருத்துவமனைகள் வரை அலறச் செய்தவை.

சைபர் தாக்குதல்கள் அனைத்தையும் ஒற்றை அறிக்கையாக தொகுக்கவும், அதனை ஆராய்ந்து சாத்தியமுள்ள அடுத்தக்கட்ட தாக்குதல் குறித்து எச்சரிக்கவும் கூகுளின் ஜெமினி உதவ இருக்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஒரு சைபர் தாக்குதல் நிகழ்வதற்கு முன்னரே பயனரை எச்சரிப்பதிலும் ஜெமினி ப்ரோ கவனிக்க வைக்கிறது. செயற்கை நுண்ணறிவு படலங்கள் ஆய்ந்து ஆராய்ந்த பின்னர் மனித ஆய்வாளர்கள் வசம் இவை கூடுதல் ஆய்வுக்கு ஒப்படைக்கப்படும்.

சைபர் தாக்குதல்தாரி
சைபர் தாக்குதல்தாரி

முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ’கோபைலட்’ பாதுகாப்பு அம்சங்கள் வாயிலாக ஜிபிடி-4 மாதிரியை பயன்படுத்தி, சைபர் தாக்குதல் குறித்தான இடர்களுக்கு விடை காண முயற்சித்தது. ஹேக்கிங் மற்றும் பிற தீங்கிழைக்கும் முயற்சிகள் தொடர்பான வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் வகையில் ஏஐ சாட்பாட்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக கூகுள் நிறுவனம் உணர்ந்ததும் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டது. பரிசோதனை அடிப்படையில் இருக்கும் இவை பயன்பாட்டுக்கு வரும்போது, கூகுளின் மெனக்கிடல்களை முழுவதுமாக உணர முடியும்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in