பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

தாக்குதல் நடத்தும் கும்பல்
தாக்குதல் நடத்தும் கும்பல்

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்தி வந்து பீர் பாட்டிலால் மர்மநபர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நள்ளிரவில் பெண் ஓட்டிச் சென்ற காரை ஒரு கும்பல் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஎம்டபிள்யூ காரை ஒரு பெண் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த காரில் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். அப்போது அந்த காரை ஒரு கும்பல் விரட்டிச் சென்று பாட்டில்களால் தாக்கியுள்ளது.

தாக்குதல் நடத்தும் கும்பல்
தாக்குதல் நடத்தும் கும்பல்

இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் மே 2-ம் தேதி நடந்துள்ளது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு காரை முந்திச் சென்ற பிஎம்டபிள்யூ காரை ஒரு கும்பல் திடீரென மறித்துள்ளது. அதில் இருந்து இறங்கிய சில இளைஞர்கள் திடீரென கார் மீது பீர் பாட்டில்களை வீசத் தொடங்கினர். இதனால் பயந்து போன காரில் இருந்தவர்கள் காரை திருப்பி அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த காட்சி காரின் டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," இந்த சம்பவம் ஐஎஃப்எஸ் வில்லாவுக்கு எதிரே உள்ள நாலெட்ஜ் பார்க் காவல் நிலையம் அருகே நடந்துள்ளது. அந்த பெண் ஓட்டிச் சென்ற காரை, துரத்திச் சென்ற மர்மநபர்கள், திடீரென காரை மறித்து பீர் பாட்டில்களால் தாக்கியுள்ளனர்.

வைரலான வீடியோ அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தோம். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்னர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலும் இதேபோன்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மார்ச் 29 அன்று, இரவு சர்ஜாபூர் சாலையில் காரில் பைக் மோதியது. ஓவர் டேக் செய்த போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால்,பைக்கில் இருந்த வாலிபர்கள் சுமார் 2 கி.மீ தூரம் காரில் சென்ற பெண்ணைத் துரத்திச் சென்று மிரட்டினார். இந்த சம்பவம் குறித்து அந்த 112-க்கு அந்த பெண் உதவி கோரினார். சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸார் வந்தவுடன் 2 இளைஞர்களும் தப்பியோடினர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in