இந்தியாவின் குண்டு துளைக்காத மிக இலகுவான ஜாக்கெட்... பாதுகாப்புத்துறை சுதேசி தயாரிப்பில் அடுத்த பாய்ச்சல்

குண்டு துளைக்காத் சுதேசி ஜாக்கெட்டுகள்
குண்டு துளைக்காத் சுதேசி ஜாக்கெட்டுகள்

பாதுகாப்பு துறைக்கான உபகரணங்களை உருவாக்குவதில் சுதேசி அடிப்படையில் இந்தியா வெற்றி கண்டு வருகிறது. இந்த வகையில் இந்தியாவின் மிகவும் எடை குறைந்த, குண்டு துளைக்காத ஜாக்கெட்டை டிஆர்டிஓ உருவாக்கி உள்ளது.

எல்லையிலும், எல்லைக்கு உள்ளேயும் அமைதியை நிலைநாட்டும் போக்குக்கு நிகராக, ஆட்சியாளர்களின் உயிருக்கான அச்சுறுத்தலும் அதிகரிக்கக்கூடும். இந்த வகையில் பாதுகாப்பான தேசத்தின் தலைவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உச்சமடைகின்றன. இவர்களுக்கு அப்பால் தங்கள் உயிரை துச்சமெனத் துணிந்து தேச பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பாதுகாப்பு படையினரின் உயிரைப் பாதுகாக்கவும் நவீன புல்லட் ப்ரூப் ஜாக்கட்டுகள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தயாரிப்பதில் இந்தியா சுதேசி முயற்சிகளில் வெற்றி கண்டு வருகிறது.

ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஆடைகள்
ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஆடைகள்

அவற்றில் ஒன்றாக இந்தியாவின் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’(டிஆர்டிஓ) மிக உயர்ந்த அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பிற்காக, இந்தியாவின் எடை குறைந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளது. டிஆர்டிஓ அமைப்பின் பிரிவுகளில் ஒன்றான கான்பூரில் அமைந்துள்ள, டிஃபென்ஸ் மெட்டீரியல்ஸ் அண்ட் ஸ்டோர்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட் (டிஎம்எஸ்ஆர்டிஇ) இந்த குண்டு துளைக்காத மிகவும் இலகுவான ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளது.மேற்படி ஜாக்கெட் அடுத்தடுத்து 6 தோட்டாக்கள் உடலைத் தாக்காது தடுத்து நிறுத்தும்.

இது தொடர்பாக டிஆர்டிஓ அமைப்பு வெளியிட்ட தகவலில், "டிஎம்எஸ்ஆர்டிஇ, கான்பூர்,பிஐஎஸ்-ன் அதிக அச்சுறுத்தல் நிலை 6-க்கு எதிராக, உள்நாட்டின் எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த ஜாக்கெட் ஆறு 7.62x54 ஏபிஐ தோட்டாக்களை தடுத்து நிறுத்தக்கூடியது” என்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் தனியாக வெளியிட்டு தகவலின்படி, ’பிஐஎஸ் 17051-2018-ன் படி புதிய குண்டு துளைக்காத இலகுவான ஜாக்கெட், சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது’. குண்டு துளைக்காத பிரத்யேக ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக டிஎம்எஸ்ஆர்டி அமைப்புக்கு பாதுகாப்புத் துறையின் செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டிஆர்டிஓ பெருமிதம்
டிஆர்டிஓ பெருமிதம்

குண்டு துளைக்காத ஜாக்கெட்டின் ஹார்ட் ஆர்மர் பேனல் ஆனது, பாலிமர் ஆதரவுடன் மோனோலிதிக் செராமிக் தகட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தோட்டாக்களை தடுக்கும் வல்லமையோடு அதன் இலகுவான எடை காரணமாக கூடுதல் வசதியையும் தருகிறது.

புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் அணிபவரின் தேகத்தை, எத்தகைய நவீன துப்பாக்கித் தோட்டாக்களில் இருந்தும் பாதுகாக்கும். புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் முதன்முதலில் இரண்டாம் உலகப் போரின் போது பரவலாக உருவாக்கப்பட்டன. அவை அணிந்திருப்பவரைப் பாதுகாப்பதற்காக நைலான் ஆடைக்குள் இணைக்கப்பட்ட எஃகு, அலுமினியம் அல்லது பிணைக்கப்பட்ட கண்ணாடியிழைகளின் தட்டுகளைக் கொண்டிருந்தன. ஆனால், நவீன கால புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் கெவ்லர், ஸ்டீல், பாலிஎத்திலீன் மற்றும் பீங்கான் உள்ளிட்ட பொருட்களால் வடிவமைக்கப்படுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in