‘தேவிகா’
‘தேவிகா’

‘தேவிகா’வை தெரியுமா? உலகின் முதல் ‘ஏஐ கோடிங்’ பொறியாளருக்கான இந்தியாவின் போட்டியாளர்

உலகின் முதல் ’ஏஐ கோடர்’ என அறியப்படும் டெவினுக்குப் போட்டியாக இந்தியாவிலிருந்து தேவிகா என்ற செயற்கை நுண்ணறிவு கோடிங் பொறியாளர் உருவாகி வருகிறார்.

இந்தியாவின் மென்பொருள் துறை சார்ந்த ஆர்வலர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் மத்தியில் கடந்த சில வாரங்களாக ’தேவிகா’ குறித்த பேச்சே எதிரொலித்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த 21 வயது முஃபீத், இந்த தேவிகாவுக்கான திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

கோடிங் நிரல்கள் - முஃபித்
கோடிங் நிரல்கள் - முஃபித்

மென்பொருள் துறையில் கோடிங் என்பது அடிப்படையானது. இதன் பொருட்டு உயர்கல்வி மட்டுமன்றி, பள்ளிப்பருவத்து மாணவர்கள் மத்தியிலும் கோடிங் எழுதப் பழகுவது அதிகரித்து வருகிறது. ஐடி பணியாளர்களின் ஊதியம், பதவி உயர்வு ஆகியவை அவரது கோடிங் துறை அனுபவம் மூலமே உறுதியாகிறது. ஆனால் இந்த கோடிங் நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு கபளீகரம் செய்ய ஆரம்பித்தது.

ஐடி துறையில் மனித பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய இடம்பிடித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு திறன் அடிப்படையில், தங்களை ஐடி அலுவலங்கள் மேம்படுத்தியக் கையோடு அந்த இடத்தில் அமர்ந்திருந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்தது. இந்த வகையில் கோடிங் எழுதுவதற்கு என உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளராக மார்ச் மத்தியில் டெவின் என்ற ஏஐ நுட்பம் அறிமுகமானது.

அதற்கடுத்த சில வாரங்களில் மேற்படி டெவினுக்கு போட்டியாக இந்தியாவிலிருந்து ’தேவிகா’ குறித்த அறிவிப்பு வெளியானது. அது முதல் இணையவெளியில் தேவிகா குறித்த பேச்சாகவே இருக்கிறது. களத்திலிருக்கும் டெவினுக்கு போட்டியாக தேவிகா இருக்குமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முதல் அடியிலேயே டெவினுக்கு போட்டியாக தேவிகா சாதிக்கவும் செய்திருக்கிறது.

டெவின்
டெவின்

அதாவது தேவிகா ஓபன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக இருக்கிறது. டெவின் போலன்றி, தேவிகாவை எவர் வேண்டுமானாலும் விலையின்றி உபயோகித்து பயன்பெறலாம். தேவிகாவின் தயவில் கோடிங் எழுதுவது மட்டுமன்றி, எழுதிய கோடிங் நிரல்களை சரிபார்த்து பிழைகள் திருத்தவும் இயலும். இந்த சாதக அம்சம் தேவிகா குறித்தான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

தற்போது கடைசிக் கட்டத்தில் இருக்கும் தேவிகாவுக்கான திட்டப்பணிகளில் இணைந்துகொள்ள தன்னார்வலர்களையும் கோரி இருக்கிறார்கள். அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் ஏராளமானோர் அதில் ஆர்வம் காட்ட, விரைவில் முழுமையடைந்த தேவிகா ஐடி துறைக்கு தரிசனம் தர இருக்கிறார். அப்போது உண்மையிலேயே டெவினுக்கு மாற்றாக தேவிகா நிற்பாரா என்பதும் தெரிந்துவிடும்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

x
காமதேனு
kamadenu.hindutamil.in