இன்று இரவு சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

சென்னை மக்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் இந்த செயற்கை விண்நிலையம், விண்வெளியில் சுற்றிவரும் மனிதர்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய பொருட்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

நாசா
நாசா

சர்வதேச விமான குழுக்கள், ஏவுகணை, வாகனங்கள், விமான செயல்பாடுகளின் பயிற்சி, பொறியியல் மற்றும் மேம்பாட்டு வசதிகள், தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றி வரும் இந்த சர்வதேச விண்வெளி மையம், நாளொன்றுக்கு 15.5 முறைகள் பூமியை வலம் வருகிறது.

சென்னை
சென்னை

இந்த விண்வெளி மையத்திற்கு தற்போது வரை கடுமையான பயிற்சி மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் மட்டுமே சென்று வந்துள்ளனர். தற்போதைய சூழலில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா செல்லக் கூட அனுமதி இல்லை. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வாய்ப்பு சென்னை மக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

இன்று மாலை 7.09 மணியிலிருந்து 7.16 மணி வரை சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்து செல்லும் போது, அதனை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in