ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோக்கும் முருகப்பா குழுமம், டைட்டன்... ஐபோன் உருவாக்கத்தில் அடுத்தக்கட்டம்

ஆப்பிள் ஐபோன் கேமரா
ஆப்பிள் ஐபோன் கேமரா

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியைத் தொடங்கும் ஆப்பிள் நிறுவனத்துடன் முருகப்பா குழுமம் மற்றும் டைட்டன் நிறுவனங்கள் கைகோக்க இருக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கான சீன தேசத்தின் தொழிற்சாலை தொடர்புகளுக்கு மாற்றாக, இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அமெரிக்கா - சீனா இடையே நீடிக்கும் உரசல், ஆப்பிள் தயாரிப்புகளை போட்டியாக கருதும் உள்ளூர் சந்தைகள் ஆகியவை காரணமாக தந்து சீனத்து பின்னணியை ஆப்பிள் துண்டித்து வருகிறது. இதன் இன்னொரு காரணமாக இந்தியாவின் மிகப்பெரும் சந்தையை குறிவைத்து மேக் இன் இந்தியா வரிசையில் ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களை உற்பத்தி செய்யவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முருகப்பா குழுமம்
முருகப்பா குழுமம்

இந்த 2 காரணங்களின் அடிப்படையில் இந்தியாவில் களமாடத் துடிக்கும் ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோக்க முருகப்பா குழுமம் மற்று டாடா குழுமத்தின் டைட்டன் ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளான. ஐபோனின் பிரதான உபகரணமான அதன் கேமாரா மற்றும் உதிரி பாகங்களை இந்த இரு நிறுவனங்களும் தயாரிக்கத் தயாராக உள்ளன. இந்த வருடத்தின் இறுதிக்குள் உடன்பாடுகள் எட்டப்பட்டு கேமரா உற்பத்திகள் தொடங்க இருக்கின்றன.

நொய்டாவை தளமாகக் கொண்ட கேமரா மாட்யூல் தயாரிப்பாளரான மோஷைன் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம், முருகப்பா குழுமம் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தேர்வாக மாறியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் விரும்பும் ஸ்மார்ட் போன் கேமராக்களுக்கான சவால் மிக்க இமேஜ் சென்சார்களை முருகப்பா குழுமத்தால் உருவாக்க இயலும்.

பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் அங்கமான டைட்டன் நிறுவனம் கடிகாரங்கள் மற்றும் ஆபரண நகைகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கூடவே வாகன உற்பத்திக்கான நுணுக்கமான உதிரி பாகங்களையும் தயாரித்து வருகிறது. இந்த வகையில் முருகப்பா குழுமத்துக்கு அடுத்தபடியாக டைட்டன் நிறுவனம் ஆப்பிள் தேர்வின் முன்னுரிமையில் உள்ளது. முதலில் முருகப்பாவுடன் ஆப்பிள் கூட்டு சேர்ந்தாலும், நாள் போக்கில் தனது தேவைகளுக்காக டைட்டன் பின்னணியிலும் இயங்கக் காத்திருக்கிறது.

டைட்டன்
டைட்டன்

இந்திய சந்தையை குறிவைத்து ஆப்பிள் தயாரிப்புகளை களமிறக்க முடிவு செய்துள்ள அந்த நிறுவனம், ஐபோன் வரிசையில், இந்தியாவின் பரந்த மத்திய தர வர்க்கத்தினரை குறிவைத்தும் பிரத்யேக தயாரிப்புகளை களமிறக்க காத்திருக்கிறது. இது தவிர்த்து இங்கு தயாரிக்கப்படும் ஆப்பிள் உபகரணங்கள், அதன் ஏனைய நாடுகளின் சந்தைக்கும் அனுப்பப்பட இருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் கணிசமாக உயர வாய்ப்பாகி உள்ளன. மேலும் ஆப்பிள் நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்க தரமான ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நெருக்கடிக்கும் இந்திய நிறுவனங்கள் ஆளாகி இருப்பது, வாடிக்கையாளர்களுக்கும் பயன் சேர்க்கக்கூடியது.

இதையும் வாசிக்கலாமே...

  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in