நனவாகும் பெரியாரின் பெருங்கனவு... இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய பெண்கள்!

இறுதிச்சடங்கை முன்னிட்டு நடத்திய பெண்கள்
இறுதிச்சடங்கை முன்னிட்டு நடத்திய பெண்கள்
Updated on
2 min read

பாலின சமத்துவம் என்ற தந்தை பெரியாரின் கனவை நினைவாக்கும் வகையில் சேலம் அருகே உக்கம்பருத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உக்கம்பருத்தி காடு கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்களும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது குடும்ப நிகழ்வுகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கை முன்னிட்டு நடத்திய பெண்கள்
இறுதிச்சடங்கை முன்னிட்டு நடத்திய பெண்கள்

பொதுவாக இறுதி ஊர்வலங்களில் ஆண்களே முன் நின்று நடத்துவதோடு, பெண்களை சுடுகாடு வரை அனுமதிக்காமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள். இதற்கு மாறாக செல்லமுத்துவின் இறுதி ஊர்வலத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களே தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவரின் உடலை பெண்களே சுமந்து செல்ல, ஆண்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து சென்றனர். உடல் தகனம் செய்யும் இடத்தில் உள்ள நடமாடும் தகனமேடை மூலம் செல்லமுத்துவின் உடல் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டு தகன மேடையில் வைத்து செல்லமுத்துவின் உடல் எரியூட்டப்பட்டது.

இறுதிச்சடங்கை முன்னிட்டு நடத்திய பெண்கள்
இறுதிச்சடங்கை முன்னிட்டு நடத்திய பெண்கள்

எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்பது பெரியாரின் கொள்கையாகும். பெண்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்களை ஊர்வலத்திற்கு தலைமை ஏற்க வைத்து, ஆண்கள் பின்னால் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!

மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'

நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!

நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!

அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in