அடுத்தடுத்து வெளியான ஆபாச புகைப்படங்கள்... டாடி ஆறுமுகத்திற்கு வந்த சோதனை!

டாடி ஆறுமுகம்
டாடி ஆறுமுகம்

'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற முகநூல் பக்கத்தை மர்மநபர்கள் ஹேக் செய்து, அதில் ஆபாசப் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர். அதனால், அந்த பக்கத்தை பின்தொடர்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமையல் வீடியோ
சமையல் வீடியோ

உணவு பிரியர்கள் மத்தியில் டாடி ஆறுமுகம் மிகவும் பிரபலம். தமிழர்களின் பாரம்பரிய சமையலை, மணக்க மணக்க சமைத்து, அதை வீடியோ எடுத்து தனது 'வில்லேஜ் புட் பேக்டரி' எனும் யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் யாரும் கண்டுக் கொள்ளாமல் இருந்த இந்த சேனல், நாளடைவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

தன்னுடைய எதார்த்த பேச்சாலும், சமையல் செய்யும் திறனாலும் தனக்கென ஒரு பெரும் கூட்டம், ஆறுமுகத்திற்காக உருவானது. இந்த யூடியூப் சேனல் வருமானம் மூலம் சொந்தமாக வீடு, கார் வாங்கிய அவர், தற்போது புதியதாக ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார் டாடி ஆறுமுகம்.

தற்போது வில்லேஜ் புட் பேக்டரியின் முகநூல் பக்கத்தை 53 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த பக்கத்தை மர்மநபர்கள் நேற்று முதல் முடக்கி வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி ஆபாசப் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதைப் பார்த்து பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

முகநூல் பக்கத்தை மீட்கும் முயற்சியில் வில்லேஜ் புட் பேக்டரி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தங்களின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வில்லேஜ் புட் பேக்டரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “யாரோ சிலர் அருவருக்கத்தக்க புகைப்படங்களை எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறார்கள். எத்தனை முறை அதை நீக்கினாலும் மீண்டும் ஸ்டோரியாக பதிவிடப்படுகிறது. முகநூல் நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும், நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

எல்லா இந்தியர்களும் மோசமானவர்கள் அல்ல... பலாத்காரத்திற்குள்ளான ஸ்பெயின் பெண் பேட்டி !

ராகுல் யாத்திரையில் ஆம் ஆத்மி... குஜராத் பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் இணைந்து கலக்க முடிவு!

நக்சல் தம்பதி கைது... பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை!

பாடகருக்குப் பதில் களமிறங்கும் நடிகை... பாஜக போடும் பக்கா பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in