கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது; அரசு எச்சரிக்கை!

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் (கோப்பு படம்)
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் (கோப்பு படம்)

ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்று இறக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் என அரசு அறிவித்து அதன்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியாது எனவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. மேலும் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை பயணிகளை ஏற்றி இறக்கும் இடமாக குறிப்பிடலாம் எனவும் உத்தரவு வழங்கியது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த சில நாட்களாக கோயம்பேடில் உள்ள பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன. இது தொடர்பாக தற்போது தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க எந்த உத்தரவையும் உயர்நீதிமன்றம் வழங்கவில்லை என அரசு விளக்கம் அளித்துள்ளது.

சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை ஏற்றி இருக்கும் இடங்களாக குறிப்பிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in