தென் மாவட்டங்களில் கனமழை; உப்பளங்கள் நீரில் மூழ்கி நாசம்!

உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீர்
உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீர்

தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தூத்துக்குடியை தொடர்ந்து வேதாரண்யத்திலும் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு வியாபாரிகள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருவதால் தமிழக உப்பு உற்பத்தியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பிரதானமாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, உற்பத்தி செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான டன் உப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

தொடர் மழையால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு
தொடர் மழையால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு

இதைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகரித்தது. இருப்பினும் தரமான உப்பு தயாரிக்க காலதாமதம் ஆகும் என்பதால், சுமார் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் உப்பு, 2,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இடையிடையே மழையும் பெய்து வந்ததால், உப்பு உற்பத்தி முழுமையாக மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகி இருந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாத்து வைக்கும் பணிகள் திவீரம்
உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாத்து வைக்கும் பணிகள் திவீரம்

இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் தொடர் மழை காரணமாக உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்திலும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு வாங்க வரும் வெளிமாநில வியாபாரிகள் தரமான உப்பு கிடைக்காததால் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in