சிபிஐ முடக்கிய என் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.23 லட்சத்தை காணவில்லை... மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை பகீர்!

ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை

சிபிஐ அதிகாரிகள் முடக்கி வைத்த வங்கி கணக்கில் இருந்து 23 லட்ச ரூபாயை காணவில்லை என மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை தி.நகர் மன்னார் தெருவில் வசித்து வருபவர் ராமர் பிள்ளை. இவர் மூலிகை பெட்ரோல் தயாரித்து பிரபலமானவர். ராமர்பிள்ளை இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமர் பிள்ளை, “நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோலில் குற்றம் உள்ளது என்றும், மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பை வைத்து தான் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ என் மீது வழக்கு பதிவு செய்திருந்தது.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை

மேலும் நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் மீதும் குற்றம் உள்ளதாக கூறி எனது வங்கி கணக்கையும் சிபிஐ முடக்கி வைத்தது. 23 வருட சட்டப் போராட்டத்திற்கு பிறகு என் மீதும், என் மூலிகை பெட்ரோல் மீதும் தவறு இல்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் முடக்கி வைத்த வங்கி கணக்குக்கு 23 வருட வட்டியுடன் திரும்ப தன்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை சென்னை தி.நகரில் உள்ள சம்மந்தப்பட்ட UCO கிளையில் சமர்ப்பித்து என்னுடைய பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அதற்கு வங்கி மேலாளர், "உங்கள் பணம் எங்கு போனதென்று தெரியவில்லை" என்று கூறி ஒரு வருடகாலமாக என் பணத்தை( 23 லட்சம் ) கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை

நீதிமன்ற உத்தரவை வங்கி பின்பற்றவில்லை. எனவே என் பணத்தை கையாடல் செய்த சம்மந்தப்பட்ட வங்கி மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன்.

காவல்துறை தலையிட்டு என்னுடைய பணத்தை பெற்றுத்தர வேண்டும். ஆறு மாதம் அவகாசம் கேட்ட அதிகாரிகள் ஒரு வருடமாகியும்‌ என் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளேன். மேலும்‌ சிபிஐ அதிகாரிகளால் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து எவ்வாறு பணம் காணாமல் போகும்?. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் வங்கி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in