புகையில்லா எரிபொருள் கண்டுபிடித்துள்ளேன்... மறுபடியும் ஆரம்பித்தார் ’மூலிகை பெட்ரோல்’ ராமர் பிள்ளை!

ராமர்பிள்ளை
ராமர்பிள்ளை

புகையில்லா எரிபொருளை கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை இந்திய ராணுவத்திற்கு சமர்பிக்க உள்ளதாகவும் 'மூலிகை பெட்ரோல்' ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ராமர்பிள்ளை
ராமர்பிள்ளை

'மூலிகை பெட்ரோல்' என்றாலே நினைவுக்கு வருவது ராமர் பிள்ளைதான். 1999ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஆனால், அவருக்கு எதிராக மோசடி வழக்கை பதிவு செய்தது சிபிஐ. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், 2016ம் ஆண்டு ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வழக்கில் இருந்து விடுதலை ஆனார்.

அவ்வப்போது மூலிகை பெட்ரோல் குறித்தும், பெட்ரோல் விலை உயர்வு குறித்தும், அவர் தனது கருத்துகளை பகிர்ந்து வந்த ராமர்பிள்ளை, தற்போது புகையில்லா எரிபொருளை கண்டுபிடித்துள்ளதாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மூலிகை பெட்ரோலுடன் ராமர் பிள்ளை
மூலிகை பெட்ரோலுடன் ராமர் பிள்ளை HR Ferncrystal

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு வெவ்வேறு திரவங்களை ஒன்றாக கலந்து எரிய வைத்து காட்டியுள்ளார். பின்னர் பேசிய அவர், “இந்திய ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் நட்புடன் இருக்கிறேன். அவர்கள்தான் என்னுடைய கண்டுபிடிப்புக்கான உற்பத்தியை உடனடியாக தொடங்குங்கள். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றார்கள். இந்திய ராணுவத்தினருக்காக 50 லட்ச ரூபாய் செலவில் தினமும் 5000 லிட்டர் மூலிகை எரிபொருள் உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரத்தை நிறுவியிருக்கிறோம்.

அந்த இயந்திரத்தை விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் சோதனை செய்தார்கள். அது அவர்களுக்கு திருப்தி அளித்ததால், அதற்கான உரிமம் வாங்குவதற்கான செயல்பாடுகளும் முடிந்த நிலையில், இப்போது மூலிகை எரிபொருள் தயாரிக்க இருக்கின்றோம். எங்களுடைய குழு வரும் மார்ச் 2,3ம் தேதிகளில், 5000 லிட்டர் எரிபொருள் தயாரிப்பை செய்வார்கள். அதை நேரடியாக ஒளிபரப்பு செய்யும்படி கேட்டு இருக்கிறேன். அதேபோல் சென்னையிலும் ஒரு லைவ் டெமோ நடக்கும். என்னுடைய இந்த கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பணம்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in