ஆளுநர் இதையெல்லாம் சொன்னால் கேட்டுக்கொள்வோம்... அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் ராஜ கண்ணப்பன்
ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக நியமிக்க தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு  முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "உயர்கல்வி துறையில் சார்பில் இன்று நடத்தப்பட்டது, வழக்கமான ஆய்வு தான். இந்த ஆய்வின் போது உயர்கல்வி துறையில் என்னென்ன மேம்பாடுகள் கொண்டு வரலாம் என்கிற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நிதிப் பற்றாக்குறை இந்தியாவிலேயே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள நிதிப் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பு
அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து, “ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாதது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "ஆளுநருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாததற்கு, உள்நோக்கம் எதுவும் இல்லை. அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சிகள் இருந்ததால் கடைசியாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 25 கல்லூரிகள் மோசமான நிலையில் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை மூட வேண்டுமா இல்லையா என்பது குறித்து சிண்டிகேட் முடிவெடுக்கும்” என்றார்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பு
அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், “ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் அவர் வேலையைப் பார்க்கிறார். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். அரசியல் ரீதியான கருத்துகளைத் தவிர நிர்வாக ரீதியாக அவர் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்வோம். தேசிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் இருந்தால், அந்த நல்ல விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். நாளை மறுநாள் முதல்வர் நாடு திரும்ப உள்ளார். அவர் வந்த பிறகு கல்விக் கொள்கை தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in