என்எல்சி தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது - நாளை வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு!

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு

என்.எல்.சி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதனிடையே அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக போலீஸார் அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது என்.எல்.சி., நிர்வாகத்துடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாலை என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நாளை வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தொழிலாளர்கள் விரக்தி
உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தொழிலாளர்கள் விரக்தி

மேலும் குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கடலூரில் பரபரப்பு நிலை வருகிறது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூலை மாதம், என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in