குவியும் பாராட்டு... அரசுப் பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கினார் பூரணம் அம்மாள்!

சிறப்பு விருது பெற்ற பூரணம் அம்மாள்
சிறப்பு விருது பெற்ற பூரணம் அம்மாள்

அரசுப் பள்ளிக்காக மேலும் 91 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய பூரணம் அம்மாளுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பூரணம் அம்மாள்
பூரணம் அம்மாள்

மதுரை சர்வேயர் காலணியைச் சேர்ந்தவர் ஆயி பூரணம் அம்மாள்(52). கனரா வங்கியில் அலுவலக உதவியாளராக பணியில் இருந்த இவரது கணவர் உக்கிர பாண்டியன் பணியிலிருந்த போதே காலமானதால் அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிடைத்த கிளார்க் பணியில் தற்போது உள்ளார். இளம் வயதிலேயே கணவரை இழந்தாலும் தனது மகள் ஜனனியை தனியாளாக இருந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து திருமணம் செய்துள்ளார். திருமணமான நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளும் இறந்துவிட்டார். இதனால், பூரணம் அம்மாள் மனம் உடைந்து விட்டார்.

பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மரியாதை
பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மரியாதை

தங்கள் சொத்தாக இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பிய தனது மகள் ஜனனியின் ஆசையை நிறைவேற்ற மதுரை கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள அரசுப் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிலம் வழங்கிய பூரணம் அம்மாள்
நிலம் வழங்கிய பூரணம் அம்மாள்

இதையடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பூரணம் அம்மாளுக்கு, ஆளுநர் முன்னிலையில் சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார். இந்நிலையில், மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 செண்ட் நிலத்தைப் பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.3.5கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த பரந்துபட்ட தயாள குணத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in