கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி... மே 17 ல் துவங்குகிறது!

கொடைக்கானல் மலர் கண்காட்சி
கொடைக்கானல் மலர் கண்காட்சி

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17 ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17 ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. முதன்முறையாக பிரையண்ட் பூங்காவில் 10 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கொடைக்கானல் மலர் கண்காட்சி
கொடைக்கானல் மலர் கண்காட்சி

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி கூறியதாவது, “திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா மே 17 ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் விழாவில் மே 17 முதல் மே 26 வரை 10 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளது.

கொடைக்கானல் மலர் கண்காட்சி
கொடைக்கானல் மலர் கண்காட்சி

சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்படவுள்ளது. விழா நடைபெறும் பத்து நாட்களிலும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in