தமிழகத்தில் 23ம் தேதி வரை கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை... தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை!

தமிழகத்தில் மழை
தமிழகத்தில் மழை
Updated on
2 min read

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக மாநில பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும். விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை செவ்வாய்க்கிழமை (மே 21) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை,சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை(மே 21) கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புதன்கிழமை(மே 22) காலை வரை, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் புதன்கிழமை(மே 22) காலை வரை கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

23.05.2024: கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

குமரிக் கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

இதனை தொடர்ந்து தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ வரும் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அதற்கான ஆரஞ்ச் அலர்ட் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் 296 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், பேரிடர் மேலாண்மை துறை மூலமாக 2.66 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மையை 1070 என்ற உதவி எண் மூலமும், மாவட்ட பேரிடர் மேலாண்மையை 1077 என்ற எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!

3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in