சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

மழை
மழை

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை வருகின்ற 22ம் தேதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வரும் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் மழைக்கான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ஆலர்ட் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை
மழை

பலத்த இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் மழை நீர் சூழாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையின் போது மரங்களின் கீழ் நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in