அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு: முதல்வர் அறிவிப்பு

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு: முதல்வர் அறிவிப்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்திய செய்தியறிந்து வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறப்பாக நடத்தியவர் பங்காரு அடிகளார். அனைத்து பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிக புரட்சி மிகவும் மதித்து போற்றத்தக்கது.

பங்காரு அடிகளாரை இழந்து வாடும் குடும்பத்தினர், பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பங்காரு அடிகளார் சேவைகளைப் போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in