தமிழக இளம் வீரர் சாதனை... உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார்!

கார்ல்சன் கார்த்திகேயன் முரளி
கார்ல்சன் கார்த்திகேயன் முரளி

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக நம்பர் ஓன் வீரர் நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி தோற்கடித்தார். உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

கத்தாரில் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி அக்.10 முதல் 20 வரை நடக்கிறது. இதில் உலகின் சிறந்த முன்னணி செஸ் வீரர்கள் 160 பேர் பங்கேற்றனர். இப்போட்டி 9 சுற்றுக்களாக நடக்கிறது. இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

7வது சுற்று போட்டியில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி எதிர் கொண்டார். இதில் அவர் கருப்பு காய்களுடன் ஆடினார். மிகவும் அற்புதமாக ஆடிய கார்த்திகேயன் கார்ல்சனின் சிறிய தவறை கச்சிதமாக பிடித்துக் கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கார்த்திகேயன் முரளி அபாரமாக ஆடி வெற்றி பெற்றார். இன்னும் 2 சுற்றுகள் மீதம் உள்ளன.

கார்த்திகேயன் முரளி
கார்த்திகேயன் முரளி

இந்த போட்டியில் தற்போது தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் 5.5 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். இதன் மூலம் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 3 வது இந்திய வீரர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in