சாதிய கொடுமையைத் தாண்டி சாதித்த சின்னதுரை... நேரில் அழைத்து பாராட்டிய பா.ரஞ்சித்!

சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டிய பா.ரஞ்சித்
சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டிய பா.ரஞ்சித்

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 12ம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னதுரையை, இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை. மகள் சந்திரா. இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

சாதிய வன்கொடுமையால் சக மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள், சின்னதுரையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைத் தடுக்க முயன்ற சின்னத்துரையின் சகோதரி சந்திராவையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவரும் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவர் சின்னதுரை பெற்ற மதிப்பெண்கள்
மாணவர் சின்னதுரை பெற்ற மதிப்பெண்கள்BG

பள்ளிக்குச் செல்லாமல் சிகிச்சை பெற்றபடியே 12ம் வகுப்பை நிறைவு செய்தார் சின்னதுரை. வீடு மற்றும் மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். பின்னர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சின்னதுரை எழுதினார். இந்த தேர்வில், சின்னத்துரை 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, கணினி பயன்பாடு-94, கணக்குப்பதிவியல்-85, பொருளாதாரம்-84 வீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சின்னதுரைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்துரையை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
சின்னத்துரையை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

முக்கியமாக, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டினார். "எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்றாக படிக்க வேண்டும். படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்" என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சின்னதுரை, "என்னை தாக்கிய மாணவர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; இது போன்று யாருக்கும் செய்யக்கூடாது, அவர்களும் படித்து முன்னேற்றம் அடைய வேண்டும். இந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன். நான் பி.காம் முடித்து சிஏ படிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், தனது அலுவலகத்திற்கு மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டினார். சின்னத்துரைக்கு பொன்னாடை போர்த்தி, அம்பேத்கர் புத்தகங்களை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேற்படிப்பு குறித்து பா.ரஞ்சித் கேள்விக்கு, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளதாக சின்னதுரை தெரிவித்தார். இதையடுத்து, "கல்லூரி கட்டணம் உட்பட எந்த உதவியாக இருந்தாலும் நீலம் பண்பாட்டு மையம் செய்வதற்கு தயாராக உள்ளது" என்று பா.ரஞ்சித் உறுதியளித்தார். அப்போது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெயக்குமார், நடிகர் அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in