ஐஏஎஸ் படித்தாலும் பள்ளி ஆசிரியரை மறக்காத பாலச்சந்திரன்... 40 ஆண்டுகளாக தொட்டுத் தொடரும் பந்தம்!

ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டுவுடன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்
ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டுவுடன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்

தனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த தமிழ் ஆசிரியர் இறந்த பிறகு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமகனாக இருந்து ஆசிரியரின் குடும்பத்தை கவனித்து வருவது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட பாலச்சந்திரன், அங்குள்ள செயின்ட் மேரீஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர். உயர்படிப்பு முடித்த அவர் பின்னர் குடிமைப்பணி தேர்வுகளை எழுந்தி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பாலச்சந்திரன், சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். தற்போது பெங்களூருவில் வசித்து வரும் இவர், சமூகம் சார்ந்த செயல்களில் அக்கறை காட்டுவதுடன், பொதுநலன் தொடர்பான கருத்துகளை தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்.

ஆசிரியர் ராமசாமியின் பேரன் சரவணன் குடும்பத்தினருடன் பாலசந்திரன்
ஆசிரியர் ராமசாமியின் பேரன் சரவணன் குடும்பத்தினருடன் பாலசந்திரன்

தமிழ் மீது பெரும் பற்றுகொண்ட பாலச்சந்திரன், இலக்கிய புலமை பெற்றவராகவும் திகழ்ந்து வருகிறார். பாலச்சந்திரன் இளவயதில் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு 7 மற்றும் 8-ம் வகுப்புகளின் தலைமை ஆசிரியராக ராமசாமி என்ற தமிழ் ஆசிரியர் இருந்தார். அவர் பாலச்சந்திரனின் தமிழ் ஆர்வத்தைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தியதோடு, அவரை நாடகங்களில் கம்பர் வேடமிட்டும் நடிக்கவும் வைத்தார். இதனால் இருவருக்கும் இடையே ஆழ்ந்த பற்றும் பாசமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் ராமசாமி காலமானார்.

பட்டுவின் காலில் விழுந்து ஆசி பெறும் பாலச்சந்திரன்
பட்டுவின் காலில் விழுந்து ஆசி பெறும் பாலச்சந்திரன்

ஒவ்வொரு முறையும் தஞ்சைக்கு வரும்போது பாலச்சந்திரன், ராமசாமியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருடன் நட்பு பாராட்டுவது வழக்கம். ஆசிரியர் ராமசாமியின் மறைவுக்குப் பிறகும், அந்த வழக்கத்தை பாலச்சந்திரன் தொடர்கிறார். ராமசாமியின் வீட்டில் மூத்த பிள்ளையாக வலம் வரும் அவர், அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, ஆசிரியர் ராமசாமியின் மனைவியான 80 வயது பட்டுவை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அவரது காலில் விழுந்து ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பாலச்சந்திரன்.

பாலச்சந்திரன் வாங்கிக்கொடுத்த பசுமாடுடன் சரவணன்
பாலச்சந்திரன் வாங்கிக்கொடுத்த பசுமாடுடன் சரவணன்

தற்போது திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள நேமம் கிராமத்தில் தனது பேரன் சரவணனுடன் வசித்து வருகிறார் ராமசாமியின் மனைவி பட்டு. அண்மையில் தஞ்சைக்கு வந்த பாலச்சந்திரன் நேமத்திற்குச் சென்று பட்டுவை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் முதுமையால் அவதிப்பட்டு வருவதையும், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதையும் அறிந்தவர், அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, ராமசாமியின் பேரன் சரவணனுக்கு 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கறவை மாடு ஒன்றையும் வாங்கி கொடுத்த பாலச்சந்திரன், அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பத்தையும், பட்டுவையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

படிக்கும் காலத்திலேயே ஆசிரியரை மதிக்கத் தெரியாத மாணவர்கள் அதிகரித்துவிட்ட காலம் இது. ஆசிரியர்களை பள்ளி வகுப்பறையிலேயே வைத்து மிரட்டுவது, ஆசிரியர்களை கிண்டல் அடிப்பதை வீடியோவாக பதிவு செய்வது - இப்படியான செய்திகளைத்தான் இப்போது அதிகம் பார்க்கமுடிகிறது. இத்தகைய சூழலில், பள்ளியில் தனக்கு கணக்குச் சொல்லிக் கொடுத்த ஆசியரின் குடும்பத்தை மாணவர் ஒருவர் 40 ஆண்டுகள் கடந்தும் போற்றிக் கொண்டாடுவதும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் அரிதான ஒன்றுதான்!

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in