5 கிராமங்களில் வெறிச்சோடிக் கிடக்கும் வாக்குச்சாவடி மையங்கள்... காரணம் இது தான்!

வெறிச்சோடிக் கிடக்கும் வாக்குச்சாவடி
வெறிச்சோடிக் கிடக்கும் வாக்குச்சாவடி

தனியார் உரத்தொழிற்சாலையை மூடக்கோரி மதுரையில் 5 கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக இங்குள்ள வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளைச் சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்று வட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இந்த தொழிற்சாலையால் 5 கிராமங்களில் நிலத்தடி நீர், மண்வளம் பாதிக்கப்படுவதால் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஏற்கெனவே மனு அளித்ததிருந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராமமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் செந்தாமரை உறுதிமொழி அளித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்த கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

ஆனாலும், இந்த ஆலை மூடப்படுவதில்லை. இந்த நிலையில், உரத்தொழிற்சாலையை மூடாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தாசில்தாரிடம் 5 கிராம மக்களும் நேற்று மனு அளித்தனர் ஆனால், இன்று அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காதால், 5 கிராம மக்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

இதன் காரணமாக 5 கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கினறன. இதனையறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் செந்தாமரை, காவல் துறை டிஎஸ்பி அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. உரத்தொழிற்சாலையை மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று 5 கிராம மக்களும் அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in