வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்களித்த பின் நடிகர் ரஜினிகாந்த்
வாக்களித்த பின் நடிகர் ரஜினிகாந்த்

மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்துள்ளார் .

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை எட்டு மணியளவில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தன்னுடைய வாக்கினைச் செலுத்தினார்.

முன்னதாக வாக்களிக்க போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கிளம்பும் போது பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, "வாக்குரிமை இருக்கும் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது தான் மரியாதை, கவுரவம். வாக்களிக்கவில்லை என்றால் அது மரியாதை இல்லை. அதனால் அனைவரும் சிந்தித்து வாக்களியுங்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in