வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ரெமல் புயலாக உருவாக உள்ளதை அடுத்து நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கியுள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரெமல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தென்படுவதாகவும், ரெமல் புயல் தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வருகிற 26 ஆம் தேதி ரெமல் புயல் வங்கதேச கடற்கரையோரம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே ரெமல் புயல் காரணமாக வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அலைகள் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடற்கரையோர பகுதிகளில் தங்களது படகுகளை நிறுத்தி உள்ளனர். மேலும் வலைகளை சீர்படுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மீனவர்களை எச்சரிக்கும் வகையில் நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்
பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்
அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!
விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?