இன்று தேசிய சகோதரர்கள் தினம்... அண்ணன் - தம்பியாக பிறந்தவர்களும், வாழ்பவர்களும் கொண்டாட வேண்டிய தினம்!

தேசிய சகோதரர்கள் தினம்
தேசிய சகோதரர்கள் தினம்
Updated on
2 min read

அண்ணன் தம்பியாக பிறந்தவர்கள் தங்களுக்குள் முரண்பட ஏராளமான காரணங்கள் இருக்கலாம்; ஆனால் உறவை புதுப்பிக்கவும் கொண்டாடவும் ஒரு சில வாய்ப்புகளே உண்டு. அவற்றில் ஒன்று, இன்றைய தேசிய சகோதரர்கள் தினம்.

ரத்த உறவில் சகோதரர்களாக பிறந்தவர்கள் மட்டுமல்ல, பழகுவதில் அப்படி தங்களை சகோதரர்களாக உணர வாய்ப்பானவர்களும், இன்றைய தேசிய சகோதரர் தினத்தை சிறப்புடன் கொண்டாடலாம். சகோதரர்கள் மத்தியில் ஆண்டு நெடுக பூசல்கள் வெடிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்; ஆனால் அந்த பூசலை பூசிமெழுகவும், உறவுக்கு புத்துயிர் தரவும் இன்றைய சகோதரர் தினத்தில் வாழ்த்தினை பகிர்ந்து சரி செய்ய முயலலாம்.

தேசிய சகோதரர்கள் தினம்
தேசிய சகோதரர்கள் தினம்

ஒரு வாழ்த்துப் படமோ, இருவரி வாட்ஸ் அப் தகவலோ, இருவர் மட்டுமே அறிந்த மலரும் நினைவுகளோ, பழைய புகைப்படமோ... எதுவேண்டுமாயின் பகிர்ந்துகொள்வதன் மூலம் பட்டுப்போயிருந்த உறவை மீட்டெடுக்க உதவலாம். பிரச்சினை ஏதுமின்றி ஆரோக்கியமான உறவை பேணுவோர், அதனை மேலும் சிறப்பாக்கவும் இன்றைய தினத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். விருப்பத்துக்குரிய பரிசுகள் பரிமாறுவது, சேர்ந்து வெளியே உலாத்துவது, குடும்பங்களுடன் நேரத்தை செலவழிப்பது உள்ளிட்டவை அவற்றில் சேரும்.

ரத்த உறவில் சகோதரர்களாக பிறந்தவர்கள் மட்டுமல்ல, அப்படி தங்களை உணர வாய்ப்பான, அற்புத அண்ணன் தம்பிகளும், இன்றைய தினத்தை கொண்டாடலாம். இன்றைய வேகமான உலகத்தில், இது போன்ற ஒரு சில தினங்களே உணர்வுகளையும், உறவுகளையும் உயிர்ப்பிக்க வாய்ப்பு தருகின்றன.

சகோதரர்களாக பிறக்காதபோதும், பழக்கத்தில் பங்காளிகளாக தங்களை உணரத் தலைப்பட்டவர்கள் கூடுதலாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். தனிப்பட்ட மன உளைச்சல் முதல் பொருளாதார தடுமாற்றங்கள் வரை, பெரிதாய் பிரதிபலன் பாராது தோள்தாங்கும் உறவுகள் அமைவது பெரும் கொடுப்பினை.

தேசிய சகோதரர்கள் தினம்
தேசிய சகோதரர்கள் தினம்

தேசிய சகோதரர்கள் தினத்துக்கு சுமார் 20 ஆண்டுகள் பின்னணியே உள்ளது. அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டேனியல் ரோட்ஸ் என்பவர் 2005 முதல் விளையாட்டாய் இந்த பாரம்பரித்தை தொடங்கி வைத்தார். காத்திருந்தது போன்று தேசங்கள் தோறும் சகோதரர்கள், தங்களுக்கான தினத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.ஆண்டு முழுக்க பிரிந்திருந்திருப்பினும், ஒரு பிரத்யேக தினத்தில் ஒன்றாக சந்திக்கவோ, மனம் விட்டுப் பேசவோ, பரிசுகள் பரிமாறவோ, பரஸ்பரம் வாழ்த்திக்கொள்ளவோ இந்த தினத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in